குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் சாரல் மழை


குமரி மாவட்டத்தில்  அணைப்பகுதிகளில் சாரல் மழை
x
தினத்தந்தி 10 May 2022 11:46 PM IST (Updated: 10 May 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அணைப்பகுதி உள்பட மலையோரங்களில் சாரல் மழை பெய்தது.

குலசேகரம், 
குமரி மாவட்டத்தில் அணைப்பகுதி உள்பட மலையோரங்களில் சாரல் மழை பெய்தது.
சாரல் மழை
அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்திலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பத்தினால் வீதிகளில் இயல்பாக நடமாட முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 
இந்த நிலையில் பகலில் மாவட்டத்தில் பலத்த சூறைகாற்று வீசியது. மேலும் அணைப் பகுதிகள் மற்றும் குலசேகரம், செருப்பாலூர், திற்பரப்பு, களியல், பொன்மனை, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் நண்பகலில் மிதமான சாரல் மழை பெய்தது. மேலும் இப்பகுதிகளில் பலத்த காற்றும் வீசியதால் வெப்பம் தணிந்து இதமான கால நிலை நிலவியது.
பேச்சிப்பாறை அணை 42 அடியை தொட்டது
இந்த நிலையில் கோடை மழை காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 42 அடியை நெருங்கி வருகிறது. அதே வேளையில் தொடர் கனமழை பெய்யாத நிலையில், வெள்ள அபாய அளவால் பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Next Story