மாவட்ட செய்திகள்

தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை சாவு + "||" + child death in water

தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை சாவு

தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை சாவு
தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை சாவு
மன்னார்குடி;
மன்னார்குடி அருகே வாஞ்சியூர் கிராமத்தில் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. 
2 வயது குழந்தை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வாஞ்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவருடைய மனைவி சரண்யா. இவர்களது மகள் சாக்க்ஷி (வயது2). நேற்று முன்தினம் மதியம் வீட்டின்  வெளியே குழந்தை சாக்க்ஷி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது திடீரென குழந்தை சாக்‌ஷி மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சாக்‌ஷியை தேடினர். ஆனால் சாக்‌ஷி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அவளது பெற்றோர் வீ்ட்டின் பின்புறம் சென்றனர். 
பரிதாப சாவு
அப்போது குழந்தை சாக்‌ஷி அங்கு இருந்த சிறிய தண்ணீர்   தொட்டியில் மிதந்தாள். உடனே அவளது பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக  மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் வாஞ்சியூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.