தக்கலை அருகே அனுமதியின்றி இயங்கிய கேரள சுற்றுலா பஸ் சிறைபிடிப்பு


தக்கலை அருகே  அனுமதியின்றி இயங்கிய கேரள சுற்றுலா பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 10 May 2022 6:21 PM GMT (Updated: 10 May 2022 6:21 PM GMT)

தக்கலை அருகே அனுமதியின்றி இயங்கிய கேரள சுற்றுலா பஸ் சிறைபிடிப்பு

தக்கலை, 
தக்கலை அருகே  திருவிதாங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் மூணாறுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்றிரவு கேரள மாநிலத்தில் இருந்து ஒரு சுற்றுலா பஸ் திருவிதாங்கோட்டிற்கு வந்தது. இந்த பஸ் தமிழகத்தில் இயக்க அனுமதி இல்லை என்பதை அறிந்த உள்ளூர் வாகன ஓட்டிகள் ஒன்றுதிரண்டு கேரள பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் சுற்றுலா செல்ல ஆர்வத்துடன் வந்த மாணவ-மாணவிகள் பதற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும், தக்கலை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த வட்டார ஆய்வாளர் ராஜேஷ் கேரள சுற்றுலா பஸ்சுக்கு ரூ.49 ஆயிரம் அபராதம் விதித்தார். அதன்பின்பு பஸ் அங்கிருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிகொண்டு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story