காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2022 6:22 PM GMT (Updated: 2022-05-10T23:52:01+05:30)

சிதம்பரம் பாசிமுத்தான் ஓடை பாலத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்சிதம்பரம்

வாலிபர்

சிதம்பரம் அருகே உள்ள வேலப்பாடி கண்ணங்குடி பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் மகன் நவின்(வயது 22). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர் நேற்று காலை வேலப்பாடி பகுதியிலுள்ள பாசி முத்தான் ஓடை  பாலத்தில் உள்ள கம்பியில், பிளாஸ்டிக் டியூபால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

காதல் தோல்வி

விசாரணையில் நவீன் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், செல்போனில் பேசிய போது திடீரென அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதை அடுத்து காதலை அந்த பெண் முறித்துக்கொண்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தூக்கில் தொங்கிய நவீன் உடலை போலீசார் கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story