திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,840 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,840 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 11:54 PM IST (Updated: 10 May 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,840 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 55 தேர்வு மையங்களில் 133 பள்ளிகளை சேர்ந்த 14,796 பேர் நேற்று தேர்வு எழுத இந்தனர். ஆனால் 956 பேர் தேர்வு எழுதவில்லை. 13,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். பொதுத்தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

Next Story