நெய்வேலியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


நெய்வேலியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 11:55 PM IST (Updated: 10 May 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்



நெய்வேலி

 திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் நெய்வேலி 8-வது வட்டம் பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் தலைமையில் நடைபெற்றது. மாநில இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன், கடலூர் மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், செயலாளர் தாமோதரன், இளைஞரணி மாநில துணை செயலாளர் தம்பி பிரபாகரன், விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் பாஸ்கர், இளம்பரிதி, கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பொறியாளர்கள் பணி நியமனத்தில் தமிழர்களுக்கு எதிராக சதி நடந்திருப்பதாகவும் அந்த பணி நியமன அறிக்கையை திரும்பப் பெற்று முறைப்படி பணி நியமனம் செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக செயல் தலைவர் அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் ஜெயக்குமார், காப்பாளர் ஜெயராமன், என்.எல்.சி. தொ.மு.ச. தலைவர் திருமாவளவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. பொருளாளர் அய்யப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மண்டல இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெய்வேலி நகர இளைஞரணி தலைவர் ராஜா சிதம்பரம் நன்றி கூறினார்.

Next Story