முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து


முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து
x
தினத்தந்தி 10 May 2022 6:29 PM GMT (Updated: 2022-05-10T23:59:03+05:30)

நாட்டறம்பள்ளி அருகே முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை

ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்த மாது என்பவர் வேலூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரியை ஒட்டி சென்றார். நாட்டறம்பள்ளி அருகே சென்றபோது போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. டிரைவரின் இடிபாடுகளுக்குள் சிக்கியது.  இதில் படுகாயம் அடைந்த மாதுவை அங்கிருந்த பொது மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story