போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்


போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
x
தினத்தந்தி 10 May 2022 6:30 PM GMT (Updated: 2022-05-11T00:00:54+05:30)

கோவில் திருவிழாவில் போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோட்டூர், மே.11-
கோட்டூர் அருகே அக்கரைக்கோட்டகம் ஊராட்சி பன்னியூர் கிராமத்தில் உள்ள மலுக்கன் கோவில் திருவிழா நடைபெற்றது அப்போது கறம்பக்குடி மேலசாலையிலிருந்து கோவிலுக்கு காவடிஎடுத்து வந்த போது ஒரு சிலர் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்களார் போலீஸ் ஏட்டு  ராமலிங்கம் சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த வளர்ச்சேரி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(வயது22), சக்தி(25), சிவமுத்து(23), கறம்பக்குடி கிராமத்தை சேர்ந்த பிரபா(22) ஆகியோர் ஏட்டு ராமலிங்கத்தை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருக்களார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி, சிவமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story