கடல் வழியாக கஞ்சா கடத்தினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
கடல் வழியாக கஞ்சா கடத்தினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு, நாகை கடற்படை முகாம் லெப்டினன்ட் கமாண்டர் அறிவுறுத்தி உள்ளார்.
வேதாரண்யம்:
கடல் வழியாக கஞ்சா கடத்தினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு, நாகை கடற்படை முகாம் லெப்டினன்ட் கமாண்டர் அறிவுறுத்தி உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவ கிராமத்தில் நாகை கடற்படை பாதுகாப்பு குழுமத்தினர், மீனவர்கள் கலந்தாய்வு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை இந்திய கடற்படை முகாம் லெப்டினன்ட் கமாண்டர் கர்மீந்தர் சிங் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடற்கரை மற்றும் கடல் பரப்பில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு மீனவர்கள் துணைபோகக்கூடாது. கடல் வழியாக கஞ்சா, போதை பொருட்கள் கடத்துவது தெரிய வந்தால் மீனவர்கள் உடனே போலீசாருக்கும், கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
கரை ஒதுங்கும் பொருட்கள்
கரை ஒதுங்கும் பொருட்கள் குறித்து , சந்தேகப்படும் வகையில் சுற்றித்தியும் நபர்கள் குறித்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.
கூட்டத்தில் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் விக்னேஷ், கடற்படை வீரர்கள் ராஜேஷ், நவீன், அலோக் குமார் மற்றும் அதிகாரிகளும், மீனவ பஞ்சாயத்தார், மீனவர்களும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story