கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 10 May 2022 6:36 PM GMT (Updated: 2022-05-11T00:06:02+05:30)

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

எஸ்.புதூர், 
எஸ்.புதூர் அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் புழுதிபட்டி அரசு கால்நடை மருந்தகம் மூலமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான சிறப்பு  மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஊசி செலுத்துதல், சினை பரிசோதனை, தடுப்பூசிகள், மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கால்நடைகளை கொண்டு வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் புழுதிபட்டி கால்நடை உதவி மருத்துவர் கார்த்தி, ஊராட்சி தலைவர் ஜெயமணி சங்கர், ஒன்றிய கவுன்சிலர் இந்திராகாந்தி, சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story