வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது


வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 10 May 2022 6:44 PM GMT (Updated: 10 May 2022 6:44 PM GMT)

திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

சாலை விரிவாக்கம், வாகன நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியின் மூலம் எந்தெந்த சாலையில் எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன என்று வாகனங்களில் எண்ணிக்கையை கணக்கீடு செய்து அதன் அடிப்படையாக கொண்டு சாலை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் நேற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை கோட்டத்தில் 44 இடங்களில் இப்பணி தொடங்கியது. இதில் 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் நடைபெற்ற பணியினை 
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் இப்பணியினை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர்கள் கலைமணி, தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இப்பணியானது தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது.

Next Story