உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை


உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 11 May 2022 12:17 AM IST (Updated: 11 May 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

இறால் பண்ணைகளின் பதிவை புதுப்பிக்க தவறினால் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

வெளிப்பாளையம்:
இறால் பண்ணைகளின் பதிவை புதுப்பிக்க தவறினால் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இறால் பண்ணைகள்
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு சட்டம் 2005-ன் படி கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து உவர்நீர் இறால் பண்ணைகளும், கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்து, பதிவு சான்று பெற வேண்டும். பதிவு செய்யப்பட்ட இறால் பண்ணைகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். 
இச்சட்ட வழிகாட்டுதலின் படி, பதிவு செய்யாமல் இயங்கும் இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்க வழிவகை உள்ளது.
ரூ.1 லட்சம் அபராதம், 3 ஆண்டுகள் சிறை
 நாகை மாவட்டத்தில் பதிவை புதுப்பிக்காமல் இயங்கி வரும் உவர்நீர் இறால் பண்ணைகள் வருகிற 15-ந் தேதிக்குள்(ஞாயிற்றுக்கிழமை)விண்ணப்பித்து பதிவை புதுப்பித்து கொள்ள வேண்டும். நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், நாகை (தெற்கு) அலுவலகத்தை தொடர்பு கொண்டு படிவம் III -ஐ பெற்று, படிவத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் கொடுத்து இறால் பண்ணைகளின் பதிவை புதுப்பிக்க வேண்டும். 
பதிவை புதுப்பிக்க தவறினால் இறால் பண்ணைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story