மாவட்ட செய்திகள்

வடமாநில வாலிபர் ஏரியில் மூழ்கி பலி + "||" + North Valipar drowns in lake

வடமாநில வாலிபர் ஏரியில் மூழ்கி பலி

வடமாநில வாலிபர் ஏரியில் மூழ்கி பலி
அரக்கோணம் அருேக வடமாநில வாலிபர் ஏரியில் மூழ்கி பலியானார்.
அரக்கோணம்


அரக்கோணம் அருேக வடமாநில வாலிபர் ஏரியில் மூழ்கி பலியானார்.

அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் பெரிய ஏரியில் நேற்று காலை 30 வயது மதிக்க தக்க நபர் ஒருவர் குளித்துள்ளார். அப்போது அந்த நபர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதனால் அவர் நீரில் மூழ்கி மாயமானார். இதனை கண்ட அங்கு மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதைத்தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 15 பேர் கொண்ட  குழுவினர் ஏரியில் நீண்ட நேரம் தேடி மாலை 4 மணியளவில் தண்ணீரில் மூழ்கிய நபரின் உடலை மீட்டனர். 

அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைபற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.