மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்


மண் அள்ளிய வாகனங்கள்  பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2022 12:29 AM IST (Updated: 11 May 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் நெல்மடூர் அய்யனார் கோவில் அருகே அனுமதியின்றி மண் அள்ளுவதாக பரமக்குடி தாசில்தார் தமிம்ராஜாவிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் அவர் அங்கு சென்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளி கொண்டிருந்த இரண்டு டிராக்டர்கள் மற்றும் ஒரு எந்திரத்தை பறிமுதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story