ெரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு


ெரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
x
தினத்தந்தி 10 May 2022 6:59 PM GMT (Updated: 2022-05-11T00:29:35+05:30)

ெரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

பரமக்குடி
பரமக்குடி ெரயில் நிலையத்திற்கு நேற்று காலை 6.40 மணிக்கு ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து வந்தது. அப்போது பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் ெரயில் ராமேசுவரம் நோக்கி சென்றது. அப்போது தண்டவாளத்தில் ஒரு வாலிபர் ெரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அவர்கள் வந்து பார்வையிட்டு இறந்து கிடந்த வாலிபரது  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதைத் தொடர்ந்து இறந்த வாலிபர் தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுகாடு கொல்லை சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் கார்த்திக் (வயது 28) என்பது தெரியவந்தது. இவர் தஞ்சாவூரில் இருந்து ராமேசுவரத்திற்கு ரெயிலில் வந்துள்ளார். அப்போது படிக்கட்டில் அமர்ந்து வந்த அவர் ெரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது அண்ணன் சரவணன் மற்றும் குடும்பத்தினரிடம் மானாமதுரை ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story