தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை


தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 May 2022 12:31 AM IST (Updated: 11 May 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

உளுந்தூா்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமானவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கி பணம் கட்டி வந்தனர். குறிப்பிட்ட காலம் முடிந்தும் வட்டியுடன் சேமிப்பு பணத்தை வாடிக்கையாளர்களுக்கு தனியார் நிதிநிறுவனம் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட பொதுமக்கள் நேற்று அந்த தனியார் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் தனியார் நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

Related Tags :
Next Story