முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்


முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 7:01 PM GMT (Updated: 2022-05-11T00:31:59+05:30)

அருப்புக்கோட்டையில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது. 
குறைதீர்க்கும் கூட்டம் 
அருப்புக்கோட்டையில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய சொத்து வாங்கும் போது பத்திரப்பதிவு கட்டணத்திலிருந்தும், வருடாந்திர சொத்துவரியிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும். 
வரிசை முறை 
மேலும் விருதுநகர் ராணுவ கேண்டீனில் பொருட்கள் வாங்க வரும் ராணுவ வீரர்களின் குடும்பத்தார் அலைக்கழிக்கப்படுவதால் முன்பிருந்த வரிசை முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். 
மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களது கோரிக்கையை மனுவாக ஆர்.டி.ஓ.விடம் அளித்தனர். இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க செயலாளர் சுகுமார் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

Next Story