படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி
படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் ஆணைப்படி, படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வியாபார தொழிலுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் சேவை மற்றும் உற்பத்தி தொழில் தொடங்க உத்தேசித்துள்ள விண்ணப்பதாரர்கள் திட்டத்திற்கு பதிலாக பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அதன்படி நடப்பாண்டில் 17 பேருக்கு வியாபார நிறுவனங்கள் உருவாக்க வங்கிகள் மூலம் கடன் வழங்க ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் https://www.msmeonline.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக ஆதார் அட்டை, புகைப்படம், கல்வித்தகுதி சான்று, கல்வி மாற்றுச் சான்று, புள்ளிவிவரம், திட்ட அறிக்கை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குனர்/பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தேவராஜ் நகர், ஐ.வி.பி.எம். எதிரில், ராணிப்பேட்டை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story