வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2022 7:18 PM GMT (Updated: 2022-05-11T00:48:38+05:30)

மது குடித்ததை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆற்காடு


மது குடித்ததை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலாஜாவை அடுத்த வேலம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 20). பெரியப்பா கண்ணன் வீட்டில் வளர்ந்து வந்த இவர் வாலாஜாவில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் ஆற்காட்டில் தங்கி ஒரு தனியார் ஓட்டலில் பகுதிநேர ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். 
தமிழ்ச்செல்வனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது பெரியப்பா கண்ணன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் இரவு அவர் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழ்ச்செல்வன் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story