கூரை வீடு எரிந்து நாசம்


கூரை வீடு எரிந்து நாசம்
x
தினத்தந்தி 11 May 2022 12:52 AM IST (Updated: 11 May 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

வண்டுவாஞ்சேரியில் கூரை வீடு எரிந்து நாசம் அடைந்தது.

வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சி வெள்ளி கிடங்கு பகுதியில் வசிப்பவர் ரத்தினசாமி (வயது63). இவரது கூரை வீடு நேற்று மின் கசிவு காரணமாக வீடு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனா். தகவல் அறிந்த வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதன் சேதமதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என  கூறப்படுகிறது இது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த  கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குமார், ஒன்றியககுழு உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

Next Story