குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு


குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 11 May 2022 12:56 AM IST (Updated: 11 May 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சங்கராபுரம், 
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் குழந்தைகள் திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கராபுரம் பெண் போலீசார் சிவகாமி, வனிதா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி கூறினர். தொடர்ந்து பெண்களுக்கு  எதிரான பாலியல் குற்றங்கள் பற்றியும், காவலன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம் ஏற்படும் பயன்கள் பற்றியும் பேசினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story