மாவட்ட செய்திகள்

தனியார் கம்பெனி உரிமையாளர் தற்கொலை + "||" + Private company owner commits suicide

தனியார் கம்பெனி உரிமையாளர் தற்கொலை

தனியார் கம்பெனி உரிமையாளர் தற்கொலை
தனியார் கம்பெனி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்
திருக்காட்டுப்பள்ளி
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கலைவாணன் நகரைச் சேர்ந்தவர் கரிகாலன் (வயது 44). இவர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பிரம்மன் பேட்டை கிராமத்தில், தண்ணீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் (மினரல் வாட்டர்) கம்பெனி நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் 24-ந் தேதி தனது கம்பெனியில் எலி மருந்தை(விஷம்) தின்று விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் கரிகாலனின் மனைவி தீபா புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கரிகாலன் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.