ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 May 2022 7:44 PM GMT (Updated: 2022-05-11T01:14:57+05:30)

ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற மின் பொறியாளர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதாக கடந்த மாதம் 3-ந் தேதி பெறப்பட்ட புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் பறித்த ரவுடி மகாமுனியை (வயது 36) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் மகாமுனி மீது திருச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு உள்பட 19 வழக்குகளும், திருச்சிமாநகரபோலீஸ்நிலையங்களில் 6 வழக்குகளும் என மொத்தம் 25 வழக்குகள் இருந்தது தெரியவந்தது. எனவே அவர் தொடர்ந்து குற்றம்செய்யும்எண்ணத்தில்இருந்ததுதெரியவந்ததால்அவரைகுண்டர்சட்டத்தில்கைதுசெய்யமாநகரபோலீஸ்கமிஷனர்கார்த்திகேயன்உத்தரவிட்டார்.இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மகாமுனியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல்நேற்றுவழங்கப்பட்டது.

Next Story