புதிய பஸ் நிலைய இடம்; கோட்டாட்சியர் ஆய்வு


புதிய பஸ் நிலைய இடம்; கோட்டாட்சியர் ஆய்வு
x
தினத்தந்தி 10 May 2022 7:45 PM GMT (Updated: 2022-05-11T01:15:38+05:30)

சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

இளையான்குடி, 
இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டக்குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் அரசின் உத்தரவுப்படி சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ள இடங்களை ஆய்வு செய்தார். பழைய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள அரசு நிலங்கள் போதுமானதாக உள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் புதிய பஸ் நிலைய எதிர்ப்புக் குழுவினரின் கோரிக்கைகள் கூறும் காரணங்கள் பற்றி பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story