ரேஷன் கடை ஊழியர்கள் சங்க கூட்டம்
வெம்பக்கோட்டை அருகே ரேஷன் கடை ஊழியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜலீல் தலைமை வகித்தார். மாவட்ட பேரவை செயலாளர் பொன்ராம், மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.மாவட்ட பொருளாளர் சம்பத், அமைப்பு செயலாளர் ராமசாமி, இணைச்செயலாளர்கள் சண்முகநாதன், அழகு பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிபக் கழகம், மொத்த விற்பனை பண்டக சாலைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாலுகா கூட்டுறவு விற்பனை சங்கம், பிரதான பண்டக சாலைகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் நடத்தப்படுகிறது. இதனை ஒரே அமைப்பாக செயல்படுத்தவேண்டும், மேலும் அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியில் 1-1-2022 முதல் அறிவித்த உத்தரவு நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story