நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் மழை


நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் மழை
x
தினத்தந்தி 10 May 2022 7:57 PM GMT (Updated: 2022-05-11T01:27:52+05:30)

நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது.

நொய்யல், 
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், பாலத்துறை, நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் கூலி வேலைக்கு சென்று மாலை நேரத்தில் திரும்பியவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Related Tags :
Next Story