கார் மோதி வளையல் வியாபாரி பலி


கார் மோதி வளையல் வியாபாரி பலி
x
தினத்தந்தி 11 May 2022 1:28 AM IST (Updated: 11 May 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி வளையல் வியாபாரி உயிரிழந்தார்.

கொட்டாம்பட்டி, 
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (வயது 50). மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக வளையல் விற்பனை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கொட்டாம்பட்டியை அடுத்துள்ள சூரப்பட்டி புதூர் கிராமத்தில் நடைபெறும் திருவிழாவில் வியாபாரம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். பள்ளபட்டி நான்கு வழி சாலையில் செல்லும்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் தூக்கிவீசப்பட்ட ஆண்டிச்சாமி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story