பிளஸ்-1 பொதுத்தேர்வை 7,717 மாணவ, மாணவிகள் எழுதினர்


பிளஸ்-1 பொதுத்தேர்வை 7,717 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 11 May 2022 1:32 AM IST (Updated: 11 May 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 பொதுத்தேர்வை 7,717 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

பெரம்பலூர்:

பொதுத்தேர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர். இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 75 பள்ளிகளில் பயிலும் சுமார் 7 ஆயிரத்து 800 மாணவ, மாணவிகள் 32 தேர்வு மையங்களில் எழுதி வருகின்றனர். இந்த தேர்வு வருகிற 28-ந் தேதிவரை நடக்கிறது. இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 143 பள்ளிகளில் பயிலும் சுமார் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் 40 தேர்வு மையங்களில் எழுதி வருகின்றனர். இந்த தேர்வு வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது.
321 பேர் வரவில்லை
இந்நிலையில் 79 பள்ளிகளில் பயிலும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் மாவட்டத்தில் 32 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. நேற்று மொழிப்பாடத்திற்கான தேர்வை எழுத 8 ஆயிரத்து 38 மாணவ-மாணவிகள் தகுதி பெற்றிருந்தனர்.
இதில் 7 ஆயிரத்து 717 மாணவ, மாணவிகள் நேற்று தேர்வு எழுதினர். 321 பேர் தேர்வு எழுத வரவில்லை. பெரம்பலூர் மாவட்ட தேர்வு மையங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story