மின் தடையால் பொதுமக்கள் அவதி


மின் தடையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 May 2022 1:32 AM IST (Updated: 11 May 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசியதால் மின்வாரியத் துறையினர் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே மின் வினியோகத்தை தடை செய்தனர். மின் தடை சில பகுதிகளில் நள்ளிரவு முதல் நேற்று காலை 10 மணி வரை நீடித்ததால், கிராம பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். மாவட்டத்தில் பாளையம், ஈச்சம்பட்டி, அந்தூர், குரும்பாபாளையம், மங்கூன் ஆகிய பகுதிகளில் சில மின்கம்பங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால், ஆங்காங்கே போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.


Next Story