மழை அளவு விவரம்


மழை அளவு விவரம்
x
தினத்தந்தி 11 May 2022 1:32 AM IST (Updated: 11 May 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பெய்துள்ள மழை கோடை உழவிற்கும், வைகாசி பட்டத்திற்கு நிலத்தை தயார் செய்வதற்கும் உதவிகரமாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இந்த மழை பெரம்பலூர் நகரில் ஆழ்துளை கிணறுகளில் நீர் ஊறுவதற்கு பெரிதும் துணையாக இருக்கும் என்று மழை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
செட்டிகுளம்-8, பாடாலூர்-9, அகரம்சிகூர்-2, லெப்பைக்குடிகாடு- 10, புதுவேட்டக்குடி-5, பெரம்பலூர்- 19, எறையூர்-9, கிருஷ்ணாபுரம்-7, தழுதாழை-18, வி.களத்தூர்-1, வேப்பந்தட்டை-8. மாவட்டத்தில் மொத்தம் 96 மி.மீ. அளவிலும், சராசரியாக 8.73 மி.மீ. அளவிலும் மழை பதிவாகி உள்ளது.

Related Tags :
Next Story