மாரியம்மன் கோவில் சப்பரத்தேரோட்டம்


மாரியம்மன் கோவில் சப்பரத்தேரோட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 1:32 AM IST (Updated: 11 May 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவில் சப்பரத்தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் உள்ள மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. 8-ந்தேதி மாவிளக்கு பூஜையும், நேற்று முன்தினம் பொங்கல் வழிபாடும் நடந்தது. நேற்று மதியம் சீர் எடுத்தல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து முக்கிய திருவிழாவான சப்பரத்தேரோட்டமும் நடந்தது. இதில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் உற்சவ திருமேனி தேரில் வைக்கப்பட்டு மேளதாளம், தாரை, தப்பட்டை முழங்க தேர் முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து வரப்பட்டு மாலையில் நிலையை அடைந்தது.  இதில் கிராம தலைவர் மணி, செயலாளர் சிவப்பிரகாசம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், வார்டு கவுன்சிலர் துரை.காமராஜ் மற்றும் பார்க்கவ குல மக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் நிலையை அடைந்த பின்னர் பிராயசித்த வழிபாடு நடந்தது. இன்று (புதன்கிழமை) மஞ்சள்நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Next Story