மனைவி-மாமியார் மீது தாக்குதல்


மனைவி-மாமியார் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 11 May 2022 1:36 AM IST (Updated: 11 May 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

மனைவி-மாமியாரை தாக்கிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

வல்லம்
தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள பூதராயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 36). சரக்கு ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ரோஸ்லின்மேரி (28). கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரோஸ்லின்மேரி செங்கிப்பட்டி அருகில் உள்ள பாளையப்பட்டியில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று பாளையப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்ற மைக்கேல்ராஜ், அங்கு மனைவி ரோஸ்லின்மேரி, மாமியார் ராணியிடம் வாய் தகராறில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் மனைவி மற்றும் மாமியாைர மைக்கேல்ராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த ராணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் செங்கிப்பட்டி போலீசார் மைக்கேல்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story