தமிழக அணி வீரர்கள் தங்கம் வென்று சாதனை


தமிழக அணி வீரர்கள் தங்கம் வென்று சாதனை
x

தமிழக அணி வீரர்கள் தங்கம் வென்று சாதனை

திருச்சி, மே.11-
மராட்டிய மாநிலம் கல்யாண் என்ற இடத்தில் தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோ பால் விளையாட்டு போட்டி கடந்த 6-ந் தேதிதொடங்கி 8-ந் தேதிவரை நடைபெற்றது. இப்போட்டியில் 10-க்கும் மேற்பட்டமாநிலங்களிலிருந்துவிளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். தமிழ்நாடு ஏரோ ஸ்கேட்டோ பால் சங்க தலைவர் ராகேஷ் என்.சுப்பிரமணியன் தலைமையில் சங்க செயலாளர் பிரவீன் ஜான்சன் மேற்பார்வையில் தமிழக அணியின் தலைமை பயிற்சியாளர் அபுதாஹிர் 12 வயதிற்கு உட்பட்ட அணிக்கு தமிழ்நாட்டில் சிறந்த முறையில் விளையாடக் கூடிய அஸ்வந்த், முகமது ஆகில், பிரியதர்ஷன், தார்வின், சஞ்சய் ரஞ்சன், சபரிநாத், ரித்தீஸ்வரன் உள்ளிட்ட 11 வீரர்களை தேர்வு செய்து சிறப்பாக பயிற்சி அளித்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க செய்தார்.காலில் ஸ்கேட்டிங் ரோல் கட்டிங் கொண்டு சிறப்பாக விளையாடி தமிழக அணி வீரர்கள், தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றனர். அந்த அணிக்கு, சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் தமிழக அணி ஆசிய அளவிலான விளையாட்டுக்கும் தேர்வு ஆனது. தமிழக அணியினர் நேற்று காலை திருச்சி திரும்பினர். அவர்களுக்கு தமிழ்நாடு ஏரோ ஸ்கேட்டோ பால் சங்க தலைவர் ராகேஷ் என்.சுப்பிரமணியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு லட்டு, சாக்லெட் ஆகியன வழங்கப்பட்டதுடன், சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேலும் ஆசிய அளவிலானஏரோஸ்கேட்டோபால்விளையாட்டில் வீரர்கள் பங்கேற்க தமிழக அரசு உரிய உதவியும், அங்கீகாரமும் வழங்க வேண்டும்எனவலியுறுத்தினர்.

Next Story