மாவட்ட செய்திகள்

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் அள்ளிய லாரியை விரட்டி சென்ற கிராம அதிகாரிக்கு கொலை மிரட்டல் + "||" + Threatened to kill

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் அள்ளிய லாரியை விரட்டி சென்ற கிராம அதிகாரிக்கு கொலை மிரட்டல்

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் அள்ளிய லாரியை விரட்டி சென்ற கிராம அதிகாரிக்கு கொலை மிரட்டல்
மானாமதுரை வைகை ஆற்றில் மணல் அள்ளிய லாரியை விரட்டி சென்ற கிராம அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மானாமதுரை, 
மானாமதுரை அருகே வேதியரேந்தல் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றுபவர் கோபாலகிருஷ்ணன். மானாமதுரை வேதியரேந்தல் பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு அடிக்கடி புகார் வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை மானாமதுரை வைகை ஆற்றில் மினி லாரிகளில் சிலர் மணல் அள்ளுவதாக அவருக்கு தகவல் கிடைத்தது. வைகை ஆற்று பகுதிக்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி எதிரே வந்த இரண்டு மணல் மினிலாரியினை பார்த்து வண்டியை நிறுத்தியுள்ளார். மினி லாரி நிற்காமல் சென்று உள்ளது. இதை தொடர்ந்து மினி லாரியை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார். லாரியில் இருந்து இறங்கிய மணல் கொள்ளை கும்பல் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கும், உயர்அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது
விளாத்திகுளம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
3. இந்து மகாசபா மாநில தலைவருக்கு கொலை மிரட்டல் ;எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது
இந்து மகாசபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
4. பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 9 பேர் மீது வழக்கு
ஜெயங்கொண்டம் அருகே பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5. வாலிபருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
சுத்தமல்லியில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.