கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.
நெல்லை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த சிறப்பு பயிற்சி முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் வந்து நீச்சல் பயிற்சி பெற்று செல்கின்றனர்.
இதேபோல் கோடை கால தடகள பயிற்சி முகாம், ஆக்கி பயிற்சி முகாம், கைப்பந்து பயிற்சி முகாம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கான பயிற்சி முகாம் காலை 7 மணி முதல் 10 மணிவரை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில் ஏராளமானோர் பயிற்சி பெற்று செல்கின்றனர்.
Related Tags :
Next Story