மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 21, 22-ந் தேதிகளில் நடக்கிறது; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி + "||" + Teacher Qualification Examination in Karnataka will be held on 21st and 22nd

கர்நாடகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 21, 22-ந் தேதிகளில் நடக்கிறது; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

கர்நாடகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 21, 22-ந் தேதிகளில் நடக்கிறது; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
கர்நாடகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 21, 22-ந் தேதிகளில் நடப்பதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
பெங்களூரு:

  கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆசிரியர் தகுதி தேர்வு

  கர்நாடகத்தில் அரசு பள்ளிகளுக்கு புதிதாக 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் 435 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  இதில் எந்த தவறும் நிகழாத வண்ணம் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மையங்களுக்கு வர வேண்டும். 2 கட்டமாக பரிசோதனை நடத்தப்படும். ஒரு கட்டத்தில் போலீசாரும், மற்றொரு கட்டத்தில் தேர்வு மைய ஊழியர்களும் சோதனை செய்வார்கள்.

கண்காணிப்பு கேமராக்கள்

  தேர்வு மையங்களிலை் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தேர்வு எழுதுபவர்கள் எந்த வதந்திகளையும் நம்பாமல் தேர்வுக்கு தயாராக வர வேண்டும். இந்த தேர்வை நேர்மையான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரி ஆகியோரது தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  தேர்வு மையங்களை சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்படும். கர்நாடகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டு வருகிற 16-ந் தேதி திட்டமிட்டப்படி தொடங்குகிறது. முதல் 2 வாரங்கள் கற்றல் சீர்திருத்தம் என்ற பெயரில் கொரோனாவால் கட்நத 2 ஆண்டுளாக பாதிக்கப்பட்ட கல்வியை சரிசெய்யும் வகையில் கற்பித்தல் மேற்கொள்ளப்படும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இந்த மாதம் 3-வது வாரத்தில் வெளியிடப்படும்.
  இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.