கள்ளக்காதலை கைவிட மறுத்த விவசாயி படுகொலை; மாமனார்-மைத்துனர் உள்பட 4 பேர் கைது


கள்ளக்காதலை கைவிட மறுத்த விவசாயி படுகொலை; மாமனார்-மைத்துனர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 1:57 AM IST (Updated: 11 May 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த விவசாயியை கொலை செய்த மாமனார்-மைத்துனர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

துமகூரு:

துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா கரிஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மூட்லய்யா(வயது 40). விவசாயி. இவரது மனைவி சுமித்ரா. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் மூட்லய்யாவுக்கும், கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி சுமித்ராவின் தந்தை அய்யண்ணாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுடன் இருந்த கள்ளக்காதலை கைவிடும்படி மூடலய்யாவிடம், அய்யண்ணா கூறினார்.

  ஆனால் கள்ளக்காதலை கைவிட மூட்லய்யா மறுத்து விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்ற மூட்லய்யாவை, அய்யண்ணா, அவரது மகன் சோமசேகர் உள்பட 4 பேர் சேர்ந்து ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இதுகுறித்து குப்பி போலீசார் வழக்குப்பதிந்து அய்யண்ணா, சோமசேகர் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story