ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 1:59 AM IST (Updated: 11 May 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவிடைமருதூர்
 திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மணி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர், ஆதிதிராவிட நல மாவட்ட செயலாளர் ராஜா, துணை செயலாளர் மோகன்,  வட்டார செயலாளர் காளிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story