கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குலசேகரம்:
கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் வினீஸ் பாபு தலைமையில் போலீசார், குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் அந்த காரை சோதனையிட்ட போது அதில் சிறு சிறு மூடைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை காருடன் பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story