பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 2:32 AM IST (Updated: 11 May 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை
தமிழகத்தின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக தமிழக நிதியமைச்சர் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என சட்டசபையில் பேசியது குறித்து தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிங்கம்பேட்டையில் உள்ள அம்மாபேட்டை வட்டார கல்வி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு அம்மாபேட்டை வட்டார தலைவர் இரா.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் வே.உதயசூரியன், பொருளாளர் ப.உமாமகேஸ்வரி, கல்வி மாவட்ட செயலாளர் ப.சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் யு.கே.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி பேசினர். இதில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்துக்கு அந்தியூர் வட்டார தலைவர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நம்பியூர்
நம்பியூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல துணைத் தலைவர் அருள்சுந்தரரூபன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் நா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் வட்டாரச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் திலகவதி, மாவட்ட துணைத் தலைவர் அருண்ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் வட்டார செயலாளர் அண்ணாமலை, பவானி கல்வி மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் தியாகு, வட்டார பொருளாளர் மைனாவதி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Next Story