சேலம் மாவட்டத்தில் 125 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் கலெக்டர் கார்மேகம் உத்தரவு


சேலம் மாவட்டத்தில் 125 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் கலெக்டர் கார்மேகம் உத்தரவு
x
தினத்தந்தி 11 May 2022 2:32 AM IST (Updated: 11 May 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 125 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணி இடமாற்றம் செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

சேலம், 
பணி இடமாறுதல்
சேலம் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ளவர்கள் நிர்வாக நலன் கருதி பணி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய செல்வம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி பிரிவுக்கும், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வைரவேல் மேச்சேரிக்கும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருளானந்தராஜ் சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஏற்காடு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் அதே ஊராட்சியில் உள்ள சத்துணவு பிரிவுக்கும், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலவேலவன் வீரபாண்டிக்கும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமாள் கொங்கணாபுரத்துக்கும் இடமாற்றப்பட்டனர்.
பதவி உயர்வு
தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய குணலட்சுமி கெங்கவல்லிக்கும், நங்கவள்ளி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக் எடப்பாடிக்கும் பணி இடமாறுதல் செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 125 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் உள்ள 3 பேர் வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்று பணி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பிறப்பித்துள்ளார்.


Next Story