சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு


சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 11 May 2022 2:38 AM IST (Updated: 11 May 2022 2:38 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு செய்தார்.

சூரமங்கலம், 
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் மல்லையா நேற்று சேலம் ெரயில்வே கோட்டத்திற்கு வந்திருந்தார், பின்னர் அவர் சேலம் ஜங்சன் ெரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அங்கு பிளாட்பாரம் 5-ல் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். இந்த நடைமேடையில் கழிவறை வசதிகளை ஆய்வு செய்து மேம்படுத்த அறிவுறுத்தினார். ரெயில் நிலையத்தில் உள்ள எஸ்கலேட்டர்கள் செயல்பாட்டை கேட்டறிந்தார். நடைமேடையில் செயல்பட்டுவரும் உணவகங்களை ஆய்வுசெய்து தரம் குறித்து கேட்டார். 4-வது பிளாட்பாரத்தில் நடந்து வரும் பணிகளை சுரங்கப்பாதை வழியாக சென்று ஆய்வு செய்தார், 
அதன்பிறகு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்திற்குச் சென்று பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் கையேடுகளை அவர் வெளியிட்டார். பாதுகாப்பான ெரயில் இயக்கம் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. கருத்தரங்கில் ெரயில் இயக்கத்தில் பாதுகாப்பு குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது சேலம் ெரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ், கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ெரயில்வே உயர் அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர்,

Next Story