குளங்களை மாசுபடுத்தும் ஆகாய தாமரைகளை உரமாக்க திட்டம்
நாகர்கோவிலில் குளங்களை மாசுபடுத்தும் ஆகாய தாமரைகளை உரமாக்க திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் குளங்களை மாசுபடுத்தும் ஆகாய தாமரைகளை உரமாக்க திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தண்ணீர் மாசு
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள குளங்களில் ஆகாய தாமரைகள் நிரம்பி தண்ணீரை மாசுபடுத்தி வருகிறது. குறிப்பாக சுப்பையார் குளம், செம்மாங்குளம், புத்தேரி குளம் உள்ளிட்ட குளங்களில் அதிகளவில் ஆகாய தாமரைகள் உள்ளன. இதனால் தண்ணீர் அசுத்தமாவதுடன் மீன்களும் இறக்கின்றன. எனவே குளங்களில் நிரம்பியுள்ள ஆகாய தாமரைகளை அகற்றி உரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் அதை ஒட்டியுள்ள குளங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
ஆய்வு
இதற்கான ஆய்வு பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக புத்தேரி குளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, ஆகாய தாமரை மீது புதிய தொழில்நுட்பம் முறையில் திரவம் செலுத்தி காய்ந்து போக செய்து, பின்னர் அவற்றை குளத்தில் இருந்து அப்புறப்படுத்தி உரமாக மாற்றப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story