108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முகாம்; சேலத்தில் நாளை நடக்கிறது


108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முகாம்; சேலத்தில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 10 May 2022 9:18 PM GMT (Updated: 2022-05-11T02:48:14+05:30)

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முகாம் சேலத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

ஈரோடு
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முகாம் சேலம் அண்ணா பூங்கா அருகில் தமிழ் சங்க அண்ணா நூலக வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம். மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. அல்லது அறிவியல் முதன்மை பாடங்களில் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு மாதம் சுமார் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். 19 வயதில் இருந்து 30 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி அல்லது அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த தகவலை 108 ஆம்புலன்ஸ் சேவை பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story