சேலத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 10:09 PM GMT (Updated: 2022-05-11T03:39:03+05:30)

சேலத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். சங்க கோவை மண்டல செயலாளர் சிவக்குமார், சேலம் மேற்கு மாவட்ட பொருளாளர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தங்கு தடையின்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story