செட்டியப்பனூரில் மாரியம்மன் கோவில் விழா: சாமி ஊர்வலத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


செட்டியப்பனூரில் மாரியம்மன் கோவில் விழா: சாமி ஊர்வலத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 May 2022 4:14 AM IST (Updated: 11 May 2022 4:14 AM IST)
t-max-icont-min-icon

செட்டியப்பனூரில் மாரியம்மன் கோவில் விழாவையொட்டி சாமி ஊர்வலத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர், மே.11-
ஓமலூரை அடுத்த செட்டியப்பனூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி பொங்கல் விழா மற்றும் சாமி ஊர்வலம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்கிடையே சாமி ஊர்வலம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே ஓமலூர் தாசில்தார் வல்லமுனியப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 20-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்படி இருந்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story