மாவட்ட செய்திகள்

தனியார் சிமெண்டு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் + "||" + Workers sit in private cement factory

தனியார் சிமெண்டு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தனியார் சிமெண்டு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தனியார் சிமெண்டு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த ரெட்டிபாளையத்தில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையில், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் தேசிய தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தீபாவளி போனசை உயர்த்தி வழங்க வேண்டும், ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஆலையின் உற்பத்தி பிரிவில் காலியாக உள்ள இடங்களில் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், தொழிலாளர்களின் வருடாந்திர மருத்துவக் காப்பீட்டு தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆலையில் உள்ள சிற்றுண்டிகளில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகளை, ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தொழிலாளர் யூனியன் சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதையடுத்து ஆலை நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்படாததால், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் தேசிய தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று ஆலையின் உள்ளே கருப்பு பட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சங்கராபுரம் ஊராட்சியில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் நியமனக்குழு, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு; பா.ஜ.க. கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் நியமனக்குழு, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புலியூரில் பா.ஜ.க. கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. 200 குடும்பத்தினர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
பாளையங்கோட்டையில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி 200 குடும்பத்தினர் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தற்காலிக விரிவுரையாளர்கள்-அலுவலக பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
தற்காலிக விரிவுரையாளர்கள்-அலுவலக பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.