நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாள்


நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாள்
x
தினத்தந்தி 11 May 2022 12:57 AM GMT (Updated: 2022-05-11T06:27:23+05:30)

நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாள் பல்லக்கில் எழுந்தருளினார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தாதம்பேட்டையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், உபய நாச்சியார்கள் சமேத உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மேலும் உற்சவமூர்த்தி நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பல்லக்கில் எழுந்தருளிய நாச்சியார் திருவீதி உலா காட்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. மாலையில் சிறப்பு திருமஞ்சனமும், சேஷ வாகன காட்சியும் நடைபெற்றது. இதில் நம்பெருமாள் சேஷ வாகனத்தில் பரமபத நாதனாக எழுந்தருளி சேவை சாதித்தார். பக்தர்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு பாசுரங்களைப் பாடி வழிபாடுகளை மேற்கொண்டனர்.

Next Story