சிறுவனை தாக்கியதாக 12 பேர் மீது வழக்கு


சிறுவனை தாக்கியதாக 12 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 May 2022 1:07 AM GMT (Updated: 2022-05-11T06:37:53+05:30)

சிறுவனை தாக்கியதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் காலனி தெருவைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மகன் கலைவாணன்(வயது 18). இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் படுக்காள தெருவில் நடைபெற்று வந்த காளியம்மன் நடன நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கண்ணதாசன் தனது செல்போன் மூலம் நடன நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் காளியம்மன் நடன நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக கலைவாணனுக்கும், அங்கிருந்த இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சேர்ந்து கலைவாணனை திட்டி தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கலைவாணன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் கலைவாணனின் தந்தை கண்ணதாசன் அளித்த புகாரின்பேரில் குரு, பாலமுருகன், கொளஞ்சி, திருநாவுக்கரசு, தங்கதுரை, சிங்க துரை, பால்ராஜ், மணிகண்டன், அருள் புண்ணியமூர்த்தி, பரத், மேகநாதன் உள்ளிட்ட 12 பேர் மீது விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story