ரூ 90 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
ரூ 90 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளகோவில்
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று முன் தினம் 181 விவசாயிகள் 1 லட்சத்து 8ஆயிரத்து 551 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 வியாபாரிகள் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.86.65க்கும், குறைந்தபட்சம் ரூ.72.25க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.89 லட்சத்து 99ஆயிரத்து 860-க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story